அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வடிவேல் கார்த்திக் கடந்த 13.06.2024 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி எம். எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியும், இந்து தர்மாசிரியருமான இவர் அண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கிராம உத்தியோகத்தராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராகிய இவர் ,பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.இவர் பெரியநீலாவணை வடிவேல் – விஜயலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரர் என்பது குறிப்படத்தக்கதாகும்.