உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்இ ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை
நேரில் சந்திப்பு பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்
அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பில் பேசவுள்ளார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இன்று காலை திடீரெனச் சுகவீனமடைந்துள்ளமையால் மாலை நடைபெறும்
மேற்படி சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது