பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளை குறைக்கும் வகையில், பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கையை மீளாய்வு செய்து 2025ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த வருடங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.