மற்றுமோர் சோகச்செய்தி.!

அம்பாறை மாவட்டம் இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது.

நீரில் மூழ்கி கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளஞர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதன் அவர்களின் மூத்த புதல்வன் டாக்டர் தக்சிதன் (BH Kalmunai) நேற்று உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறுதலாக வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

இரு தினங்களுக்கு முன்னர் காரைதீவைச் சேர்ந்த மருத்துவ துறைக்கு தெரிவாகிய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமடைந்த சோகம் மறையும் முன்னர் மீண்டும் ஒரு மருத்துவரின் இழப்பு அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல முழு நாட்டிலுமே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது