ஜுன் 05 உலக சுற்றுசூழல் தினம். அதனை முன்னிட்டும் ,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை போக்கும் வகையில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கோடு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பும் இணைந்து பெரியநீலாவனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பொது இடங்களிலும் மரநடுகை நிகழ்வுகளை (05) நடத்தியிருந்தனர்.

சூழலுக்கும், மக்களுக்கும் பயன் தரக்கூடிய பல்வேறுபட்ட இன மரங்கள் இதன்போது நடப்பட்டன.
இன் நிகழ்விலே உதவி பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க தலைமையிலான போலீஸ் சார்ஜன்ட் நஜீப் (43 65 7), சலாம் (43 89 6 ), நஜீம் (44 381), போலீஸ் கொஸ்தபர் சுரேஷ்(93469), ஆகியோர்களுடன் பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் இளைஞர் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.