ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு நேற்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய முழுமையான அதிகாரங்களைக் கோரி நிற்கும் அமைதி வழி போராட்டக் காரர்கள், பிரதேச செயலாளர் மற்றும், கல்முனை தமிழ்க் கலாசாரப் பேரவையினர் ஆகிய தரப்பினரை சந்தித்து, கல்முனை தொடர்பான தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து கலந்துரையாடினர்.

கல்முனை தமிழரின் பிரச்சனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று, தீர்வுகளை பெற துரித நடவடிக்கை எடுப்போம் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஊடகங்களிடம் தெரிவித்தார். .

இந்த சந்திப்பின்போது ரெலோ கட்சியின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் , மாவட்ட அமைப்பாளர் மற்றும், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.