கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் க. பொ. த சாதாரணதர தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும் 2024.04.27 ஆந் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வரணியா சாந்தரூபன், கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்

பே .சச்சிதானந்தம் , சிறப்பு அதிதியாகக் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கணிதபாட உதவிக் கல்விப் பணிப்பாளர் . அ.சஞ்சீவன், விசேட அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான . செ. பேரின்ப ராஜா, கல்முனை சரவணாஸ் நகை மாளிகை உரிமையாளரும் சமூகசேவையாளருமான .க.பிரகலதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இவ்விழாவில் க.பொ.த.சாதாரண தர வகுப்புகளுக்குக் கற்பிக்கும் ஆசியர்கள் அனைவரும் மலர் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு இம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக் கொள்ள வேண்டுமென அதிதிகள் ஆசிகளை வழங்கி வாழ்த்தினர்.

மேலும் இந்த நிகழ்வையொட்டியதாக வருடாவருடம் வெளியிடப்படும் ‘உரைகல்’ எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வோடு சேர்ந்ததாக ”GEM” செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட கணிதப் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது. இதனை வடிமைப்பதற்கு பெரிதும் உறுதுணையாய் நின்ற கணிதபாட ஆசிரியரான .ஏ.ஜிதார்த்தனம் இவ்விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

You missed