இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார் 35,000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமானது.

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

You missed