நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆக்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு 2267 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்நேர்முகப் பரீட்சை நாளை 08ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேற்படி ஆங்கில ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நடாத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைக்கு 2267 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தகைமைகளைப் பரீட்சிப்பதற்கான பொது நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை நாளை 08ஆம் திகதி முதல் ஐந்து தினங்கள் (8இ9இ10இ11 மற்றும் 13) ஆகிய தினங்களில் பத்தரமுல்ல இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு தகைமை பெற்றவர்கள் குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் நகல் பிரதிகளை தனித்தனியாக இணைத்து தயாரிக்கப்பட்ட இரண்டு பிரத்தியேக கோவைகள் சகிதம் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் இதில் நகல் பிரதிகள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுபவரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆவணங்கள் நேர்முகப் பரீட்சையில் முன்னிலைப்படுத்துவது அவசியமானதாகும். பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்புக்கான செயன்முறைப் பரீட்சை நோக்கம் மற்றும் பிரவேசம்இ ஆளுமை மற்றும் குரல் கட்டுப்பாடுஇ தொடர்பாடலில் தெளிவுஇ நேர முகாமைத்துவம்இ முன்வைப்பு நுட்ப முறைகளின் பயன்பாடு ஆகிய அம்ச நியதிகளை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது.

இதற்காக வழங்கப்படும் மொத்த புள்ளிகள் இருபத்தைந்தாகும். சித்தியடைய அவசியமான ஆகக் குறைந்த மொத்த புள்ளிகள் பத்தாகும்.

இது ஒவ்வொரு நியதிகளுக்கும் இரண்டு புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்படும்.

You missed