கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியையும், அதிகார அத்துமீறலையும் கண்டித்து மக்கள் சுமார் ஒரு மாதமாக போராடி வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் இந்த தீர்மானம் எடுகக்ப்பட்டுள்ளது .

அரசாங்கம் தாமதியாது கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வினை பெற்று க்கொடுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.