முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் மின்சுற்றுகளை இணைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

கொரோனா காலத்தில் நாடு பூராகவும் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக பாலின இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You missed