கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – களியாட்ட நிகழ்வுகள் யாவும் ரத்து – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து மக்கள் போராட்டம் இன்றும் 19வது நாளாகவும் தொடர்கின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

 அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டதை தவிர ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததாக இல்லை. சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாது மக்கள் போராடி வருகின்றனர்.

 இப்போராட்டத்துக்கு பல்வேறு பொது அமைப்புக்களும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி ஆதரவை வழங்கி வருகின்றனர்.

நாளை மறுதினம் கல்முனை மக்கள் கறுப்பு சித்திரையாக பிரதேச செயலகத்தின் முன்றலில் அனுஷ்ட்டிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

https://www.kalmunainet.com/archives/95272