கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்
போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது.

அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர ஆக்கபூர்வமாக எதுவுமில்லை.

சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கூடாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் போராடி வருகின்றமை மிகவும் வேதனையே.இந்த போராட்டத்தில் பெருமளவில் பொதுமக்கள் மதகுருக்கள் ,சிவில் அமைப்புக்கள் பங்குபற்றி கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அடிப்படை உரிமைக்காக கொளுத்தும் வெயிலில் போராடும் மக்களுக்கு ஒரு கூடாரம் அமைக்க அனுமதி எடுத்துக் கொடுக்க முடியாக நிலையிலேயே தமிழ் ஆளும் கட்சி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உள்ளமை வெட்கப்பட வேண்டியவிடயமே மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அரச சேவையை பெறும் தங்களின் அடிப்படை உரிமையை
பறிக்கும் இனவாத அதிகார அத்துமீறலுக்கு அரசு இடமளிக்ககூடாது இனங்களுக்கிடை
யில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இனவாத அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தங்கள் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அர
சியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக் காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும்இ இயங்கிக்
கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்
;கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை வினைத்திறனாக பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும் இம் மக்களுக்கு அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?

வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக
எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்;ளனஇ அத்துமீறிய நிருவாக அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த மக்களின் நியாயமான அடிப்டை உரிமைக்கும் அரச சேவையை தடையின்றி பெறுவதற்கும் அரசாங்கம் இனியும் தாமதிக்காது உடன் நடடிவடிக்கை எடுக்க வேண்டும். ;

You missed