( வி.ரி.சகாதேவராஜா)
நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையில் கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் மீது அதிகாரப் பயங்கரவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும்
செயலாகும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்கல்முனையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.


கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் துணை போவது நீதிமன்றத்தைஅவமதிக்கும் குற்றச் செயல். அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தைத் தர
தரமிறக்கும் செயற்பாட்டிற்கும்அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்ற செயலென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள்குறித்த போராட்டம் தொடர்ச்சியாகஆறாவது நாளாக நேற்று சனிக்கிழமைஇடம்பெற்றது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசாகஜேந்திரன், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழரசு கட்சியின் முன்னாள்வேட்பாளர்செல்வராசா கணேஷானந்தம்ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.


அங்கு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் பேசுகையில் –இதே போன்றதொரு போராட்டம்கடந்தகாலங்களில் இடம்பெற்ற போது மூன்று நாளில் முழு அதிகாரம்கொண்ட பிரதேச செயலகமாகஉயர்த்தி தருவோம் என பல அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கினர்.ராஜபக் ஷ அரசாங்கம், நல்லாட்சிஅரசாங்கம் மற்றும் தற்போதையஜனாதிபதி முன்னாள் பிரதமராகஇருந்தகாலத்தில் முழு அதிகாரம்கொண்ட பிரதேச செயலகமாகஉயர்த்திதருவோம் என வாக்குறுதி
வழங்கியிருந்தனர். என்ன நடந்தது?மேலும் அமைச்சரவை அதிகாரம்கிடைக்கப்பெற்றபிரதேச செயலகத்தில் இயங்கிய இரண்டு கிராம சேவகப்பிரிவுகளை தெற்கு பிரதேச செயலகத்தில் அனுமதியின்றி இயங்கச்செய்திருப்பதும் மனித உரிமை மீறல்.-என அவர் இதன் போது சுட்டிக்காட்டி
இருந்தார்.