கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அரச சேவையை பெறும் அடிப்படை உரிமையை தடுக்கும் இனவாதத்துக்கும் , அத்துமீறிய அதிகார பயங்கரவாதத்துக்கும் எதிராக இன்று மாலை 6.00 மணிக்கு மெழுகுதிரி ஏற்றி எதிர்பை வெளிக்காட்டும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பு மாலை 6.00 மணிக்கு இடம்பெறும் இப்போராட்டத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தமிழ் , சிங்கள மக்களை உணர்வுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி கல்முனை பிராந்திய அனைத்து சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து நாட்களாக அடையாள அமைதிப்போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

You missed