திருக்கோணேஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட திருவிழா

2024-03-27

இந்திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்களை கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றோம்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்கள் திருவிழா பணியின் நிமிர்த்தம் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இத்திருவிழாவில் கலந்து திருக்கோணேஸ்வரப்பெருமானுக்கு தொண்டு புரிய விரும்பும் இந்து இளைஞர்கள் தங்களது பெயர், விலாசம் , வயது, தொலைபேசி இலக்கம் என்பவற்றை 0776034559 , 0771226488 அல்லது 0774445128 என்ற வட்சப் இலக்கம் மூலம் 24/03/2024 க்கு முன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு இவ்வாறு தங்களது விபரங்களை அனுப்பி வைக்கும் இந்து இளைஞர்களுக்கு இலவச பேருந்து தரித்து நிற்கும் இடம் , காலம் , நேரம் அறிவிக்கப்படும் விபரம் தந்தவர்கள் மாத்திரம் பயணிக்கமுடியும்.

27.03.2024 அன்று காலை 5.30 மணிக்கு பெரியகல்லாறு , மண்டூர் , களுவாஞ்சிக்குடி , மட்டக்களப்பு , செங்கலடி , வாழைச்சேனை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகும் பேருந்து திருக்கோணேஸ்வரத்தை அடைந்து திருவிழாவின் பின் இரவு 11 மணிக்கு மட்டக்களப்பை நோக்கிப் புறப்படும். அவசர தேவைகளுக்கு
077 4445128 , 0776034559 தொடர்பு கொள்ள முடியும். கலந்து கொள்ளும் இந்து இளைஞர்கள் சைவ கலாசார உடையுடன் வருகை தருவது கட்டாயமாகும்.
அன்றைய 3 வேளை உணவும் இலவசமாக வழங்கப்படும்.

சீ.யோகேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை
மாவட்ட காரியாலயம்
தாமரைக்கேணி
மட்டக்களப்பு