திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறைக்கு தீர்வு : ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கருணாகரன் (ஜனா) எம்.பிக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பு

திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை நேற்றைய தினம் (18-03-2024)தீர்த்துவைக்கப்பட்டது…

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்போது உள்ள அலுவலகம் இடம்போதாமை காரணமாக வலயக்கல்வி அதிகாரியினால் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனிடம் கோரிக்கைக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அருகாமையில் பயன்பாடற்று இருக்கும் மாகாண மீன்பிடித் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தை வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகக் திருக்கோவில் வலயக்கல்வி நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் திருக்கோவில் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்தனர்.