வெடுக்குநாரிமலையில் கடந்த சிவராத்திரி பூசையில் ஈடுபட்ட எட்டுபேர் தடுத்துவைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலைசெய்யக்கோரி தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விக்கினேஷ்ரன் பா.உ, இல்லத்தில் நேற்று (16/03/2024) கூடிப்பேசினர் அதில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.