சர்வதேச மகளிர் தினம் – 2024 ஐ ஒட்டியதாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் நேற்று ( 14.03.2024) காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றன.

கலை நிகழ்ச்சிகள், உரைகள், பரிசளிப்புகள் என சிறப்பாக நடந்தேறிய இவ் விழாவில் இளங்கலைஞர் அஜய்காந்த் இயக்கிய ‘நான் ஹரிணி’ குறுந்திரைப்படமும் திரையிடப் பட்டது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கான திரைக்கதை பிரதியாக்கத்தை உமா வரதராஜன் எழுதியிருந்தார்.

இப்படத்தின் உருவாக்கத்தில் இவர்களுடன் சுலக்ஷ்னா சுபாசங்கர், அஜய் விஜிந்திரன், கம்ஷிக்கா, டிநேஷ்வரன், ருக்ஷன், அருண்ஷாகர் (படத்தொகுப்பு-ஒளிப்பதிவு) , திரு.ரி.ஜே.அதிசயராஜ் (பிரதேச செயலாளர்), ஷிபாயா முஜீப் ( மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பி.பிரபாகரன் (கலாசார அலுவலர்) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

குறும்படத் துறையில் ஆர்வம் கொண்ட ஓர் இளம்பெண் வீட்டிலும் ,வெளியிலும் முகங்கொடுக்க நேரிடும் சவால்களையும், நடைமுறைப் பிரச்சனைகளையும் விபரிக்கும் இக் குறும்படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.