பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

(பிரபா)

பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முகமது கலிம் என்பவரது மனைவி ஒரு வருடத்தின் முன்னர் மரணம் அடைந்ததாகவும் தனது பிள்ளைகள் தமது பராமரிப்பிலேயே இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மாற்று திறனாளிகளான கொலைசெய்யப்பட்ட பிள்ளைகள் முறையே 18,30 வயதுடையவர்கள்.மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.