நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாளை (14) சிறப்பாக பல நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“அவளுடைய பலம் நாட்டுக்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில், பல காத்திரமா நிகழ்வுககள் பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம் பெறும்.

பேரணி, மர நடுகை, குறும் படம் வெளியீடு, விற்பனையும் கண்காட்சியும், கௌரவிப்புக்கள் , சான்றிதழ்கள் வழங்கல், கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாக பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெறவுள்ளன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி மற்றும் அதிதிகளாக Dr. புஸ்ப்பலதா லோகநாதன் (பொறுப்பு வைத்திய அதிகாரி, சேனைக்குடியிருப்பு ), திருமதி வசந்தினி யோகேஸ்வரன் (சிரேஷ்ட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட அலுவலகம் ), மற்றும் திருமதி சுரேக்கா தர்ஷானி எதிரசிங்க (மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) , திருமதி கலைவாணி தயாபரன் மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அனைவரையும் வருகை தருமாறு அழைக்கப்படுகின்றனர்.