கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவ ஸ்ரீ சச்சிதானந்த சிவம் குருக்கள் அவர்களும் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக, கல்முனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலய அதிபர் திருமதி விஜயசாந்தி நந்தபால மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான கா.சாந்தகுமார், மா.லக்குணம் மற்றும் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, ஓய்வு நிலை அதிபர் கே. சந்திரலிங்கம்,வைத்தியர் கி.சுந்தரநாதன். ஸ்ரீ முருகன் ஆலய வண்ணக்கர் வே.தியாகராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றன.