தகவல் – நன்றி. பாரதி இராசநாயகம்

சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது.

சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.

இன்றிரவு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தாா்.

அங்கிருந்து அவரை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் “எவராலும்” எடுக்கப்படாமையால்தான் தனது தாயாரை பாா்க்க வேண்டும் என்ற 35 வருடகால கனவு நனவாகாமல் போய்விட்டது!

எமது தலைவா்கள் “முக்கியமான வேலைகளில்” பிஸியாக இருந்தமையால் இதனையிட்டு அக்கறைப்பட நேரம் இருக்கவில்லை!!

இறுதி நேரத்தில் சிலா் முன்னெடுத்த நடவடிக்கைகளால் அவருக்கு இலங்கை வர அனுமதி கிடைத்த போதிலும்….

கடந்த வெள்ளிக்கிழமை தனது சகோதனை மருத்துவமனையில் சாந்தன் சந்தித்தபோது எடுத்த படம்…

You missed