உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது!

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தினால், சமூக சேவைக்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் இன்று இடம்பெற்றது.

உலகத் தமிழ் பல்கலைக்கழக பணிப்பாளர் , 12 சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் கிருஸ்ணபிள்ளை ஜெயறில் சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இவர் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அறியப்பட்ட சமூக சேவையாளர் இவருடைய சேவைகள் அம்பாறை மாவட்டம் மாத்திரமின்றி இலங்கையின் பல பகுதிகளிலும் இவருடைய சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

துணிச்சலும் சிறந்த ஆளுமையும் மிக்க இவர் கலாநிதி பட்டத்தை தனது அயராத தொடர் சமூகப் பணிக்காக இள வயதில் (40) பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

மேலும் தொடர்ச்சியாக இவரது சமூகப்பணி இடம்பெற வேண்டுமென கல்முனை நெற் ஊடக வலையமைப்பு வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறது