தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகிறது.

திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட குடிநிலம் மற்றும் மண்டானை, அக்கரைப்பற்று ஆலடிவேம்பு பிரசவத்திற்கு உட்பட்ட வாச்சிக்குடா கண்ணகிபுரம் பனங்காடு அக்கரைப்பற்று 8/9 ம் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கு “கரம் கொடுப்போம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்