பெரியநீலாவணை பிரபா

பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு.


.பெரிய நீலாவணையில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமரர் குமாரசாமி துரைராஜா (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த விஷ்ணு முதியோர் சங்கம், அவரது மறைவின் பின்னர் செயல்படாமல் இருந்தது. அச் சங்கத்தை புனரமைத்து செயல்படுத்தும் நோக்கோடு அதன் கடந்த கால அங்கத்தவர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களை இணைத்து பொதுக்கூட்டம் (26)கூட்டப்பட்டு

விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைக்கப்பட்டது. இதன் புதிய செயலாளராக, திருமதி மஞ்சுளா சுந்தரலிங்கம் அவர்களும், தலைவராக கண. வரதராஜன்( ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்). பொருளாளராக குமாரசாமி மல்லிகாவதி. உப தலைவராக ஆறுமுகம் அயோத்தி மணி. உபசெயலாளராக கணபதிப்பிள்ளை இரத்தினேஸ்வரி. ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்காலத்தில் கிராமத்தின் முதியோர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் விதமாக பல்வேறுபட்ட நலத்திட்டங்களை செயற்படுத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இச் சங்கத்தின் ஆலோசகர்களாக
NEXT STEP அமைப்பின் தலைவர் ந. சௌவியதாசன்,மற்றும். திரு.ச.சதீஸ்குமார். அதிபர்,வி.ம.வி. க.திரு நாவுகரசு,திரு வி.விமல்ராஜ்(SDO)
ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.