பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

பெரியநீலாவணை பிரபா.

பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெரிய நீலாவனை கமு சரஸ்வதி வித்யாலயாலய மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் கலந்து கொண்டார்.
மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்முனை வலையகல்விஅலுவலகத்தின் பதில் வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி பருவ கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்கள், கிராம சேவகர், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் கழக உறுப்பினர்களும் விளையாட்டு நிகழ்வில்
கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமான இவ் விளையாட்டு விழாவில் பாடசாலை பாலர்களின் உடற்பயிற்சி மற்றும் பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன .