அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அயோத்தி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 108 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோவில் வளாகம் அமைகிறது.

அதில் 71 ஏக்கரில் ஆங்காங்கே தற்போது கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் 5.7 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்குகளில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

360 அடி நீளம், 235அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக ராமர் ஆலயம் இருக்கும். இந்த ஆலயத்தில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 44 நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

மூலவராக 5 வயது பால ராமர் இடம் பெறுகிறார். ஆலயத்தின் மற்ற பகுதிகளில் விநாயகர், சிவன், அனுமன், சூரியன், துர்கா, அன்னபூரணி, வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்பட பல்வேறு சன்னதிகளும் கட்டப்பட உள்ளன.