இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விவசாய வினாத்தாள்களை மாணவர் ஒருவருக்கு பணத்துக்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.