பெரியநீலாவணை வி.ஸீனோர்ஜன்)

பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்களை கௌரவித்து தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கான பொதிகளும் வழங்கும் நிகழ்வு இவ்வமைப்பின் தலைவர் .சே.யோகராசா தலைமையில் (14.01.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி .ஜே.எஸ்.ஆர்.வீரசிங்க , கொழும்பு அரிசி ஆலை உரிமையாளர் :-.பி.குணவிஜயராஜா , .கந்தையா மகாலிங்கம், முன்னாள்

மாநகரசபை உறுப்பினர் :- .சோமசுந்தரம் குபேரன் , ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி :- .பொன்னுத்துரை ஜெகநாதன்
ஓய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் :- . கணபதிப்பிள்ளை வரதராஜன். மற்றும் ஆலய தலைவர்களான .பா.அருணாச்சலம், .சி.கிருஷ்ணராஜா, .வி.கமலதாசன் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்

மேலும் அதிதிகளாக திருமதி.மலர் வேதநாயகம் உட்பட சிலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த உறுப்பினர்களான 12 முதியவர்கள் தங்களது சந்தாப்பண இலாப பங்குத்தொகையான 26000ரூபா பணத்தினை அதிதிகளின் கரங்களால் பெற்றுக்கொண்டனர் அத்தோடு அதிதிகளிலொருவராக கலந்துகொண்டிருந்த திருமதி.மலர் வேதநாயகம் இவ்வமைப்பின் அங்கத்தவர்கள் சார்பில் பட்டாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வின்போது முதியவர் ஒருவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு வாழ்த்தப்பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் மனம் மகிழ்ந்து கண்ணீர் மல்க அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.அத்தோடு அவருக்கு பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறு பரிசுத்தொகையொன்றினையும் தன்சார்பாக வழங்கியதோடு தனது உரையில் இந்நிகழ்வை ஊக்குவித்து பாராட்டினார்.


இறுதியாக அனைவருக்கும் தைப்பொங்கல் பரிசுப்பொதி அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.

You missed