பெரிய நீலாவணை பிரபா


நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோர பிரதேசங்களில் வெள்ள நிலை உருவாகியுள்ளதுடன் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


நாட்டிலே பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர் நோக்குகின்ற இந்த வேளையில் சீரற்ற இயற்கையின் சீற்றத்தால் மேலும் நெருக்கடியான நிலை மக்களுக்கு உருவாகியுள்ளது. பல இடங்களில் மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இந்த சீரற்ற காலநிலை தொடருமானால் மேலும் பல நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.