ஸ்ரீதரன் எம்.பிகே ஆதரவு!

தமிழரசு கட்சியின் தலைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந் நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது முழுமையான ஆதரவை ஸ்ரீதரன் எம்பிகே வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதரன் எம். பி கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றிய தோடு கட்சித் தொண்டர்களையும் சந்தித்திருந்தார்.

செட்டிபாளையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே யோகேஸ்வரன் இவ்வாறு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்