பெரியநீலாவணை பிரபா.

நிந்தவூர் தமிழ் பகுதியில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு!


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்துக்குட்பட்ட நிந்தவூர் 20 தமிழ் பிரிவு குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

நிந்தவூர் 20 தமிழ் பிரிவில் சுமார் 75 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் அதே வேளை வெள்ளத்தினால் 20 குடும்பங்களுக்கு மேற்பட்ட சுமார் 150 பேர் வரையில் இடம்பெயர்ந்து தங்களது உறவினர் வீடுகளில் வாழ்கின்றனர்.

இவர்களுக்கான இன்றைய இரவு உணவினை நிந்தவூர் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

பொது அமைப்புகள், நிறுவனங்கள், சமூக நலன் சார்ந்தவர்கள் இவர்கள் தொடர்பாக அக்கறை கொள்ளுமாறு கல்முனை நெற் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.