தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பட்டில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் 16.12.2023 சனிக்கிழமை தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் முன்னிலையில் அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஹாசிம் ஷாலிஹ் தலைமையில் இடம்பெற்றது.

கலாசார வரவேற்பு நடனங்களுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு அதிதிகளினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசூயா சேனாதிராஜா நிகழ்த்தினார்.


இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அரசியல் முக்கியஸ்தர்கள்,சர்வமதத்தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்ததுடன்

மலையக அரசியல் அரங்கத்தின் தலைவர் மயில்வாகனம் திலகராஜ் சிறப்புரையாற்றியதோடு தந்தை செல்வா அறக்கட்டளை நடாத்திய பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் சிறப்புரையும்,

தந்தை செல்வா பற்றிய நூல்களும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலையரசனால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.