2022(2023) ஆண்டுக்கான கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

263 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 254 மாணவர்கள் க. பொ. த உயர்தரம் பயில தகமை பெற்று உள்ளனர்.

8 A சித்திகளை 32 மாணவர்களும், 7 A சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.