2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு (FR) இன்று (நவ.22) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான மற்றொரு மனு மனுதாரர்களால் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்தே கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.