கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது!

உலக இதய மீள் உயிர்ப்பித்தல் தினத்தையிட்டு இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அனுசரனையிலும் 2023.11.17 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான “அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது.

வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இப் பயிற்சி பட்டறையில் கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மற்றும் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களுக்கான செயன்முறை விளக்கங்களினை மயக்க மருந்து வைத்திய நிபுணர் Dr.K. சுதேஸ்வரி அவர்களும் அவருடைய வைத்திய உத்தியோகத்தர்கள் குழுவினரும் இணைந்து செயற்கை மனித உடல் மாதிரிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.