மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு

 (கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்னவர் சதாத் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) விடுவித்தார்.

மேச்சல் தரை பண்ணையாளர்களின் 52 வது நாளான இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து சித்தாண்டி முருகன் ஆலையத்திற்கு முன்பாக ஆர்பாட்ட பேரணி ஆரம்பித்து பண்ணையாளர்களின் போராட்ட இடம் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்;பாட்டத்தையடுத்து அங்கு பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்பாட்டம் முடிவுற்ற பின்னர் மாணவர்கள் பஸ்வண்டியில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பஸ்வண்டியில்  பிரயாணித்த போது பின்னால் சென்ற சந்திவெளி பொலிசார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பஸ்வண்டியை நிறுத்தி அதில் சில மாணவர்களின் அடையாள அட்டையை கேட்டு 6 மாணவர்களை பகல்  ஒரு மணியளவில் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் மாலை 6 மணியவில் ஆஜர்படுத்திய போது அவர்களை தலா ஒருவருக்கு ஒரு இலச்சம் ரூபா பெறுமதியான ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற எல்லைக்குள் வதிவிடத்தைக் கொண்ட ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்