ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் 150 வருடத்திற்கு மேலாக இயங்கிவருவதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்ப்பு செய்யும் தேவை உள்ளதாக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக நலன் விரும்பிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இணைந்த கரங்கள் அமைப்பினால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு பாரதி பாலர் பாடசாலை அதிபர். திருமதி.வி. அமிர்தகலா தலைமையில் கையளிக்கப்பட்டது.

இணைந்த கரங்கள் அமைப்பின் கொடையாளர்களான கனகராஜ் நடராசமணி குடும்பம், தினேஸ்ராஜ் ஜனபாலசந்திரன் குடும்பத்தினரின் நிதி உதவியுடனும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறவுகளின் நிதி உதவியுடனும் புனரமைக்கப்பட்டு, இன்று மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக செயட்பாட்டாளர் ந. கனகராஜ் கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் அப்பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர் க. சுரேஸ், ஒந்தாச்சிமடம் விளையாட்டுக் கழக தலைவர் ச.சிரஞ்ஜிவி, கழக உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலையின் அதிபர், ஆலயபரிபாலன சபை பிரதிநிதிகள், கிராம சமூக சேவையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான ந.கனராஜ், லோ.கஜரூபன், சி.காந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

You missed