பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா!

பெரிய நீலாவணை 1B, தொடர்மாடி வீட்டு பகுதியில் செயற்பட்டு வருகின்ற திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணிவிழா நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நேற்று அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி லவன் ஜெனித்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டு பகுதி பொதுமக்களின் பூரண ஆதரவுடன் பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு மற்றும் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் இணை அனுசரனை வழங்கியிருந்தனர்.

பெரிய நீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய தர்மகர்த்தா ரவி சர்மா தலைமையில் பூசை இடம் பெற்றது. கலை நிகழ்வுகளில் கலந்துகொண்ட அறநெறி மாணவர்களுக்கான பரிசீல்களை நெக்ஸ் ரெப் உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர். இன் நிகழ்வில் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் தலைவர் திரு N. சௌவியதாசன், செயலாளர் திரு V. கார்த்திக் மற்றும் உறுப்பினர் திலகன், மற்றும் நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழக பொருளாளரும் கல்முனை நெற் ஊடக வலை அமைப்பின் பயிற்சி ஊடகவியலாளருமான திரு எஸ் .அதர்சன் அவர்களும் மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.