பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வடக்கு கிழக்கில் பல நகரங்கள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு அழுத்தம் வழங்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்கள், பொருளாதார வளங்கள், மேய்ச்சல் தரைகள் பேரினவாத குழுக்களால் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்த நிலையில் வெறிச்சேடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.