நாடு பூராகவும் ஒருவித வைரஸ் கண் நோய் பரவுவதாகவும் குழந்தைகள் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர்.

இந்நோய் தற்போது மேல் மாகாணத்தில் வேகமாக பரவி வருவதால் சிலபாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறான கண் நோய் அறிகுறிகள் தென் பட்டால் கண்களை கசக்குவதை தவிர்த்து கொள்ளுமாறும் கைகளை அடிக்கடி
கழுவுமாரும் சுகாதார தரப்பினர் கோருகின்றனர்

இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கண் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், எனினும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘கான்ஜுன்க்டிவிடிஸ்’ (Conjunctivitis) எனப்படும் இந்த கண் நோய் வைரஸால் ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகளில் கண்களில் வலி, கண்ணீர், கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஆகும்.

இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக விரைவாகப் பரவக்கூடியது என்றும் நோய்வாய்ப்பட்ட நபரின் கண்ணீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரப்புகளால் மட்டுமே இது நிகழ்கிறது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுவாக, இந்த வைரஸ் கண் நோய் இந்த நாட்களில் நிலவும் வானிலை நிலைமைகளுடன் பரவுகிறது.