செனல் 4’ தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக  பிரபல சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்தார்.

செனல் 4 குழுவினர் இந்த கூட்டத் தொடருக்கு இணையாக நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு குண்டுத் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வெளிப்படுத்த கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  54 ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த அமர்வில் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம்  மீண்டும் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள பின்புலத்தில் செனல் 4 குழுவினர் இவ்வாறு ஜெனீவா சென்றுள்ளனர்.

செனல் 4 குழுவினர் இந்த வாரத்தில், இது தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம், ஆதாரங்கள், உண்மைகள் மற்றும் ஏனைய தகவல்களை  உலகின் அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகளும் வழங்குவார்கள் எனத் தெரியவகிறது.

செனல் 4 குழுவின் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ள சிலருக்கு இந்த ஆவணப்படம் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன்.