பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 12.09.2023 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
மகாபாரத இதிகாச வரலாற்றை பிரதிபலிப்பதாக 18 நாட்கள் திருவிழா இடம்பெற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீ மிதிப்பு நிகழ்வு மறு நாள் தருமருக்கு முடி சூடுதல் பாற் பள்ளயத்துடன் உற்சவம் நிறைவு பெறும்.

12.09.2023- மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம்.
14.09.2023 ஏடு திறத்தல்,மகாபாரத பாராயணம் ஆரம்பம்.

18.09.2023இரவு சுவாமி எழுந்தருளல்.

19.09.2023காலை நாற்கால் வெட்டுதல்.

23.09.2023 இரவு கல்யாணக்கால் வெட்டுதலும் ஊர்வலமும்

27.09.2023 மதியம் திரௌபதை சகிதம் பஞ்சபாண்டவர் வனவாசம் பின் அஞ்ஞாதவாசம் செய்தல்.

28.09.2023 அருச்சுனர் பாசுபதம் பெறல், அரவாணைக் களப்பலியிடல்

29.09.2023-மாலை தீமிதிப்பு வைபவம்.

30.09.2023-பகல் பாற்பள்ளையம் தருமர் முடிசூட்டு விழா இரவுசுவாமி ஊர்வலம்.

You missed