ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி இறங்கினாலும் சரி சஜித்,டலஸ், அநுர யார் இறங்கினாலும் ரணில் விக்கிரமசிங்க வெல்வதுதான் உறுதி என அடித்துக் கூறுகிறார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ.

ரணில் விக்கிரமசிங்கவை எவராலும் தோற்கடிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து மொட்டு கட்சியின் ஒரு சாரார் பித்தலாட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்த பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கு பல்வேறு கட்சிகளும் மக்களும் ஆதரவாக உள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இந்த உண்மைகளை அனைவரும் உணர்வார்கள்.

படுகுழியில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது உறுதி என தெரிவித்தார்.