சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்!

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் 2023 போட்டிக்கான உத்தியோகபூர்வ நேரடி வர்ணனையை சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் ARV லோசனின் பங்களிப்புடன் தமிழ் FM நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ் FM வளர்ந்து வரும் கிறிக்கட் அறிவிப்பாளர்களுக்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஐந்து பேரை தெரிவு செய்து இந்த போட்டியில் நேரடி வர்ணனை செய்வதற்கு களம் அமைத்து கொடுத்துள்ளது.
அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனையைச் சேர்ந்த இளம் கிறிக்கட் வர்ணனையாளர் செ.சிந்துஜன் நேற்றைய போட்டியில் வர்ணனை செய்திருந்தார்.
அவருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.


கல்முனையில் ஒலித்த குரல் சர்வதேச அளவில் ஒலிக்க வைத்த தருணம் வாழ்வில் மறக்க முடியாத நாள்
திறமைக்கு வாய்ப்பு தமிழ் எப் எம் க்கு நன்றிகள்
நேற்றைய லங்கா பிரிமியர் லீக் 2023 எலிமினேட்டர் போட்டியில் யாழ்ப்பாணம் & கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் 18 வது ஓவர் முதல் வர்ணனை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது
காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் விளையாட்டு செய்திகளுக்கு தனித்துவமானவர் ARV Loshan அண்ணாவோடு அருகில் இருந்து வர்ண்ணை செய்தது. அவரோடும் உலக அறிவிப்பாளர் ரொசான் மதுசங்க அவர்களோடும் இணைந்து கொண்டது மகிழ்ச்சி
இந்த இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தகுதியானது கல்முனை கிரிக்கெற் உறவுகள் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்
விசேட நன்றிகள் ஒருவருக்கு பெயர் குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன் என சிந்துஜன் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.