கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது. கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? மலையகத்தில் கல்வியில் கைவைப்பதுபோல் இங்கு கை வைக்க முடியாது. இப்படியான வேலை செய்தால் ஆளுநர் வீதியில் இறங்க முடியாது என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு ஆளுநருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற போதே இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் மேலும் கூறுகையில்,
நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதுற்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான பல திட்டங்களை ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் அவர் கடந்த வாரம் வந்து சென்றார் அவரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரிகள் அதேபோன்று எல்லோரும் ஒற்றுமையக செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

கல்வியில் கூட பாரிய மாற்றங்களை கொண்டு வந்து இன்று செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். குறிப்பாக பிரதேச செயலகத்தில் பேசப்பட்ட பிரச்சினைகளில் எந்த காலத்திலும் விட்டு கொடுப்பிற்கு இடமில்லை அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

இருந்த போதும் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீன் சம்மாந்துறைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். வலய கல்வி பணிப்பாளர் சிபார்சு செய்ய முடியாது அதிகாரத்திலுள்ள செயலாளர் அதிகார துஸ்பிரயோகம் செய்யமுடியாது அதற்குதான் அரசாங்கம் ஆளுநரை நியமித்துள்ளது

நேர்முக பரீட்சை நடத்தப்பட்டே அவர் நியமிக்கப்பட்டார் அவ்வாறு தகுதியான ஒருவரை எப்படி மாற்றமுடியும்? நான் ஒரு அமைச்சராக இருந்தென். ஒரு பாடசாலை அதிபரை கூட இதுவரை மாற்றவில்லை .மாற்றவேண்டும் என்றால் எனக்கு எதிராக வேலை செய்த அவ்வளவு பேரையும் மாற்றி இருக்கலாம் ,யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் செய்வேனே தவிர எந்த பழிவாங்கலையும் செய்யவில்லை.

தற்போதுள்ள செயலாளர் திஸாநாயக்காவை இரவேடு இரவாக மாற்றியவன் நான். ஏனெனில் இந்த செயலாளர் கிழக்கு மாகாண கல்வியை முழுக்க முழுக்க அழித்தவர். அலாவுதீன் இங்கு இருக்க வேண்டியவர்.அங்கிருக்கின்றார். காத்தான்குடியில் அதிகமான பாடசாலைகளில் இடப்பற்றாக்குறை இருக்கின்றது மாற்றவேண்டும் எனத் தெரிவிக்க முடியாது.அப்படியானால் வலயக்கல்வி பணிப்பாளரிலிருந்து செயலாளர் வரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

அதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த அதிகாரியும் துஸ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது .அது இன்று அலாவூதீனுக்கு நடந்திருக்கலாம்.நாளை கந்தசாமிக்கு நடக்கலாம். ஆகவே பயமுறுத்தலில் அதிகாரிகள் வேலை செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் எந்த அதிகாரியும் இவர்களின் சொத்தால் படிக்கவில்லை.

எனவே ஆளுநரின் இந்த விளையாட்டுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் இடமில்லை கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது. எனவே ஹலாவுதீன் இடமாற்றம் பிழையானது அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

You missed