சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை

(ஏயெஸ் மெளலானா)

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் செயற்படும் ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின்  7ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த 44 மாணவரகள் மேற்படி சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தனர். இவர்களுள் நால்வர் தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவர்களாவர்.

இவர்களில் ஜௌபர் பாத்திமா ரோஷினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஷிபாரா, காலிதீன் பாத்திமா லனா ஆகிய மூவரும் முதலிடம் பெற்று நாட்டிற்கும் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் தமது கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று தாறுல் இல்மு கல்வி நிலைய நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இம்மாணவர்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரி கணித பாட ஆசிரியை ஏ.ஆர்.நிஸானா பயிற்றுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.