கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு

கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்
பெண் தலைமை தாங்கும்
குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க வாழ்வாதார ஊக்குவிப்பு உற்பத்தி மையம் (வீட்டுடன்கூடிய) இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி நிறுவனத்தின் ( Central Finance Company PLC ) பிராந்திம் 8 கிளை நிறுவன ஊழியர்களின் முழு பங்களிப்புடன் அமையவுள்ள இவ் வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.J.அதிசயராஜ் அவர்களும் கல்முனை சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி முகாமையாளர்
திரு.J. அனோஜ் அவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.S.சிறிரங்கன் மற்றும் கல்முனை சென்ட்ரல் பைனான்ஸ் கம்பனி அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்…

இதுபோன்ற சமூக சேவை செயற்பாடுகளை சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி தொடர்ச்சியாக செயல்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்..

அத்துடன் இவ் வாழ்வாதார ஊக்குவிப்பு உற்பத்தி மையத்தின் நிர்மான பணிகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மேற்பார்வை செய்துவருவதோடு… சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனினரால் இம்மாத இறுதிக்குள் இவ் கட்டிடம் உரிய பயனாளியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபடவுள்ளது .