மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் உள்ள அரச வங்கி கிளையில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் இன்று(01.06.2023)அதிகாலை சுமார் 3 மணியளவில் வங்கி கிளையின் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

இதன்போது வங்கியின் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் வங்கி கிளையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்ற நிலையில் கொள்ளையர்கள் தப்பி ஓடி சென்றுள்ளனர்.

கொள்ளையர்களை தேடும் பணி

இதனையடுத்து குறித்த வங்கிக்கு பொலிஸார் வருகைதந்துடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளனர்.

இந்நிலையில் வங்கியின் சீ.சீ.டீவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.